சுமந்திரனை காப்பாற்ற பெண் பலியாடுகள்?


எம்.ஏ.சுமந்திரனின் வெற்றிக்காக கொழும்பிலிருந்து இரு பெண்மணிகள் இறக்கப்படுவது ஏனைய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

சுமந்திரனின் சிபார்சின் அடிப்படையில் இரண்டு தரம் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளாக இருந்த அம்பிகா சற்குருநாதன் மற்றும் படுகொலை செய்யப்பட்ட ரவிராஜ் மனைவி ஆகிய இருவரே இம்முறை சுமந்திரனின் பலியாடுகளாக இறக்கப்படவுள்ளனர்.

அம்பிகா மனித உரிமை செயற்பாட்டாளர் என்ற வகையில் ரணிலால் சுமந்திரனின் சிபார்சில் நியமிக்கப்பட அவரை மைத்திரி குற்றஞ்சுமத்தியதாக முன்னாள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் என்ற அடிப்படையையே அழிக்க விளையும் இந்த அரசுடன் காலம் தள்ள முடியாது.கடந்த நமது ஆட்சியில் ஆணைக்குழுக்களின் ஒப்பீட்டளவு சுயாதீனம் உறுதி செய்யப்பட்ட 19ம் திருத்தத்தின் பின் மனித உரிமை ஆணைக்குழுவில் நியமனமானவர்.அப்போதே பலமுறை கட்சி தலைவர் கூட்டங்களில் ஜனாதிபதி மைத்திரி இவரை பெயர் குறிப்பிட்டு விளாசுவார். நான் பலமுறை ஜனாதிபதியுடன் இவர் தொடர்பில் முரண்பட்டுள்ளேன் எனவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

No comments