ஹிஸ்ஸின் கம்பஸ் கொரோனா மையமாகிறது

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுவோரை தனிமைப்படுத்தும் மையமாக மட்டக்களப்பு தனியார் கம்பஸை பயன்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி குறித்த கம்பஸ் உரிமையாளரான முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விற்கு சுகாதார பணிப்பாளர் அனில் ஜயசிந்த அனுமதி கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

வத்தளை மற்றும் மட்டக்களப்பு - மாந்தீவில் இந்த தனிமைப்படுத்தல் மையத்தை அமைக்க திட்டமிட்ட போது பொது மக்கள் எதிர்ப்பினால் அவை கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments