இறுதியானது தமிழரசு கட்சி வேட்பாளர் தெரிவு

இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாணம், வன்னி ஆகிய மாவட்டங்களிற்கான வேட்பாளர்கள் பூர்த்தி செய்யப்பட்டபோதிலும் கிழக்கு
மாகாணப் பட்டியல் இழுபறியில் காணப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் தமிழ் அரசுக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆசணங்களிற்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான கலந்துரையாடல் கொழும்பில் நேற்று (06) இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி சார்பில்,

மாவை சேனாதிராஜா,
எம்.ஏ.சுமந்திரன்,
சி.சிறிதரன்,
ஈ.சரவணபவன்,
தபேந்திரன்,
சசிகலா ரவிராஜ்,
அம்பிகா சற்குணநாதன்
ஆகியோர் இறுதி செய்யப்பட்டனர்.

வன்னி மாவட்டத்தில் (இ.த.அ.க – சார்பில்),

சாள்ஸ் நிர்மலநாதன்,
சாந்தி சிறீஸ்காந்தராஜா,
சி.சிவமோகன்,
ப.சத்தியலிங்கம்
ஆகியோர் இறுதி செய்யப்பட்டனர்.

திருகோணமலை மாவட்டதில் (இ.த.அ.க – சார்பில்),

இரா.சம்பந்தன்,
துரைரட்ணம்,
குகதாசன்,
சரா.புவனேஸ்வரன்
ஆகியோர் இறுதி செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் (இ.த.அ.க சார்பில்),

சீ.யோகேஸ்வரன்,
சிறீநேசன்
ஆகியோர் இறுதி செய்யப்பட்டனர்.

இதேவேளை குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் போட்டியிட விரும்பி விண்ணப்பித்தோரின் விபரங்களும் ஆராயப்பட்ட நிலையில் வழங்க முடியாத சூழலில் அவை நிராகரிக்கப்பட்டது.

இதேநேரம் கொழும்பு மாவட்டத்தில் இம்முறை போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்ததோடு அதற்காக தவராசாவின் பெயர் வெகுமதி ஆசணப் பட்டியலில் முன்னுரிமைப் படுத்துவதாகவும் திருகோணமலையின் தற்போதைய நிலை கருதி அந்த மாவட்டத்திற்கும் ஓர் வெகுமதி ஆசணம் வரங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments