நிதியை திருப்பினேனா: நிரூபித்தால் அரசியலில் விலகுவேன்?


வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒரு சதத்தையேனும்ம் திருப்பி அனுப்பவில்லை, அவ்வாறு திருப்பி அனுப்பியதாக யாரேனும் நிருபித்தால்
தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.

இன்று பருத்தித்துறையில் இளையோருடனான கலந்துரையாடலின் போது அவர் இச்சவாலை விடுத்துள்ளார்.

வுடமாகாண முன்னாள் முதலமைச்சர் தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஏதுமற்ற போதும் தொடர்ச்சியாக வடமாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டே வருகின்றது.

இது மத்திய அரசினால் நேரடியாக மாகாணசபை தவிர்த்து முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களிற்கான நிதியெனவும் அவை திரும்பியிருக்கலாமெனவும் முன்னாள் முதலமைச்சர் தொடர்ந்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments