2287பேரில் சந்தேகம்:ஆனோல்ட் வழங்கியது போலி?


இலங்கையில் 2287 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தி
கண்காணிக்கப்பட்டு வருகின்றனரென இலங்கை இராணுவத்தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கை தமிழரசுக் கட்சி திருகோணமலையில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.

கட்சி தலைவர் இரா.சம்பந்தன், கனடா இறக்குமதி குகதாசன் சகிதம் தனது குடும்ப கோவிலில் வணங்கி வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே யாழில் மாநாகர முதல்வர் தனது தேர்தல் பிரச்சாரத்தை மத்திய பேரூந்து நிலையத்தில் கொரோனாவிற்கு பாதுகாப்பு முகமூடி வழங்கும் நிகழ்வுடன்  ஆரம்பித்துள்ளார்.

எனினும் அவரால் வழங்கப்பட்ட முகமூடி மனித பாவனைக்கு பொருத்தமற்றதென மருத்துவர்கள் நிராகரித்துள்ளனர்.

வெறும் பருத்தி துணியில் உள்ளடுக்குகள் இன்றிஅ து தைக்கப்பட்டுள்ளதாகவும் தேவையெனின் அதனை உள்ளாடையாக பயன்படுத்த முடியுமெனவும் பெற்றுக்கொண்ட வயோதிபர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments