யாழில் இன்றும் வேட்புமனுக்கள் தாக்கல்!


கொரோனா பீதி இலங்கையினை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தாலும்
நாடாளுமன்ற தேர்தலிற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டேவருகின்றது.

இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி சார்பில் டக்ளஸ் தேவானந்தா,தவராசா,ரங்கன் மற்றும் டக்ளஸின் சகோதரன் தயானந்தா ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர்.

அதேபோன்று முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் சுயேட்சை குழுவாக தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதேபோன்று சஜித் பிறேமதாசவின் புதிய கூட்டணி சார்பில் கணேஸ் வேலாயுதம் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.

No comments