சிறீதரனுக்கு ஒன்றுமில்லை?


போலிச் செய்திகளை பரப்பி சமூகத்தில் வீண் பயப்பீதியை உருவாக்காதீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் மகன் சாரங்கன் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் வழமையாக மேற்கொள்ளும் சாதாரண இரத்த பரிசோதனை செய்வதற்காக இன்று காலை வைத்தியசாலை சென்றிருந்தார்...
அன்மையில் ஐ.நாவில் நடைபெற்ற இலங்கை தொடர்பான மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்குபற்றி மார்ச் 2ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பியிருந்ததால் சமூக பொறுப்புடன் இரத்த பரிசோதனையின் தொடர்ச்சியாக கொரோனா நோய் தொடர்பான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது..
பரிசோதனைகள் முழுமையாக நிறைவடைந்து எந்தவித பிரச்சனைகளும் இல்லை என்று உறுதி செய்த பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் வீடுதிரும்பிவிட்டார்.

No comments