7 கதிரைக்கு 330 பேர்?


யாழ்ப்பாணம் தேர்தல்த்தொகுதியில், 19 கட்சிகள் 14 சுயேட்சைக் குழுக்கள் அடங்கலாக 33 அமைப்புக்கள் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.

330 வேட்பாளர்கள் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் கதிரைகளை கைப்பற்ற களமிறங்கியுள்ளனர்.இதனிடையே மூன்று சுயேட்சைக் குழுக்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டள்ளது.

முன்னதாக இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி சார்பில் டக்ளஸ் தேவானந்தா,தவராசா,ரங்கன் மற்றும் டக்ளஸின் சகோதரன் தயானந்தா ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர்.

அதேபோன்று முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் சுயேட்சை குழுவாக தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதேபோன்று சஜித் பிறேமதாசவின் புதிய கூட்டணி சார்பில் கணேஸ் வேலாயுதம் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.

No comments