ஹெலியில் விசிறுவது பொய்

இலங்கை விமானப்படை உலங்கு வானூர்திகள் (ஹெலிகொப்டர்) மூலம் கொரோனாத் தொற்றுக் கிருமிநாசினிகளை இன்று (24) இரவு 11.30 மணிக்கு விசிறப்படும் என்று சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி வெறும் வதந்தி என இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.

இது போன்ற வதந்திகளை சில செய்தி ஊடகங்கள் வெளியிட்டிருந்த நிலையிலேயே விமானப் படை இதனை முற்றிலும் மறுத்துள்ளது.

குறித்த வதந்தி கடந்த வாரம் முதல் சமூக வலைத்தளங்களில் உலாவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments