பாஸ்டரிடம் சென்ற 18 பேர் பலாலி இராணுவ முகாமில்

யாழ்ப்பணம் வந்த கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த சுவிஸ் பாஸ்டருடன் நேரடித் தொடர்பில் இருந்ததாக அடையாளம் காணப்பட்ட 18 பேர் பலாலியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு இரண்டு கட்டங்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பான மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அவர் இன்று (24) நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். மேலும்,

யாழ்ப்பாணம் அரியாலையில் ஆராதனைக் கூட்டம் நடத்துவதற்கு சுவிஸிலிருந்து வந்த பாஸ்டருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருடன் ஓர் அறையில் தனித்துச் சந்தித்த தாவடி வாசிக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.

இதனையடுத்து பாஸ்டருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் அடையாளப்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 12 பேர் நேற்று முன்தினம் (22) காலையும் எஞ்சிய 6 பேர் மாலையும் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்றார்.

No comments