கோத்தாவை கண்டித்தது கூட்டமைப்பு

நாட்டின் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி மிருசுவில் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்டை பொதுமன்னிப்பில் விடுதலை செய்திருக்கும் ஜனாதிபதியின் சந்தர்ப்பவாத செயற்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக கண்டித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இதனை தெரிவித்துள்ளது.

அதில் மேலும்,

ஜனாதிபதி மேற்கொண்டிருக்கும் சந்தர்ப்பவாத செயற்பாட்டை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்த விவகாரத்தைப் பொறுத்தமட்டில், குறித்த வழக்கில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் இன்னும் பல வழக்குகள் குறைந்தபட்சம் விசாரணை இன்றியே காணப்படுகின்றன. - என்றுள்ளது.

No comments