பாடப்புத்தகத்தில் இருந்து முக்கிய அம்சங்கள் நீக்கம்?

கால மாற்றங்களுக்கு பொருத்தமான வகையில் முறையான கல்விக்காக தேசிய கொள்கையொன்றை உடனடியாக உருவாக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அல்லது கல்வி அமைச்சர் மற்றும் நடைமுறையில் உள்ள அரசாங்கம் மாறும்போது மாற்றம் அடையாத நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக உருவாக்கப்படும் கல்வி முறைமையாக அது அமைய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசியல்வாதிகளின் செய்திகள், புகைப்படங்களை பாடசாலை பாடப் புத்தகத்திலிருந்து நீக்குவதற்கு கல்வி அமைச்சரினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை ஜனாதிபதி பாராட்டினார்.

No comments