டாட்டா காட்டி துணை தலைவர் பதிவியை பெறுகிறார் அகில?

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த அகிலவிராஜ் காரியவசம் ஐதேக துணைத் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 4ம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பு நன்றில் உரையாற்றிய அகில விராஜ் கட்சியை ஒற்றுமைப்படுத்துவதற்காக ரணில் - சஜித் இருதரப்பும் இணக்கம் தெரிவிக்க கூடிய பொதுச் செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கான வாய்ப்பை வழங்க தான் இராஜினாமா செய்வதாகவும், தன்னை போன்றும் ஏனையவர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே துணைத்தலைவர் பதவியை பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments