ஆயிரம் ரூபாய் கிடைக்குமா? வாய் திறந்தார் கோத்தா

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும் செயற்பாடு ஏப்ரல் 10ம் திகதி அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை இன்று சந்தித்த போதே ஜனாதிபதி இந்த விடயத்தை கூறியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு பயிற்சி வழங்குவதற்கான அனுமதியை வழங்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments