சுமந்திரன் தமிழ் மக்களை தடம்மாற்றுகிறார்

இலங்கை சம்பந்தமாக ஐ.நா சபை வெளியிட்ட சில அறிக்கைகளையே ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட குற்றங்கள் சம்பந்தமாக நடாத்தப்பட்ட சர்வதேச, சுயாதீன விசாரணைகளின் அறிக்கைகள் என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றப் பார்க்கின்றார் சுமந்திரன்.

இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது. இன்று (05) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளனர்.

இலங்கை சம்பந்தமான விசேட சர்வதேச குற்றவியல் மன்றமொன்றைக் கோராமலும் அல்லது இலங்கையை சர்வதேச குற்றவியல் மன்றத்திற்குப் பாரப்படுத்துமாறு கோராமலும், ஐக்கிய நாடுகளாலும் மற்றையோராலும் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கைகளை வைத்து ஊடக அறிக்கைகளின் படி சுமந்திரன் சர்வதேச விசாரணையானது முடிவடைந்துவிட்டது என்று தமிழர்களை நம்பவைக்கப் பார்க்கின்றார்.

இது தவறானது. இலங்கை அரசினாலும் இலங்கையின் படையணியினராலும் தமிழ் மக்களுக்கு எதிராக இயற்றப்பட்ட பாரிய கொடூரச் செயல்கள் சம்பந்தமான நீதி நியாயத்தை மேற்படி அறிக்கைகள் பெற்றுக் கொடுக்கவில்லை. - என்றும் தெரிவித்துள்ளது.

No comments