ஞானசாரவுக்கு தேர்தலில் ஆப்பு; போட்டியிட முடியாத நிலையில்?

கலககொடஅத்தே ஞானசார தேரரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

நாம் மக்கள் சக்தி கட்சி சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையிலேயே அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளரின் உறுதிமொழி அறிக்கையில் ஏற்பட்ட தவறு காரணமாக வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்திலும் நாம் மக்கள் சக்தி கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்சி ஞானசார தேரர் மற்றும் ரத்ன தேரர் ஆகியோரால் இணைத்து உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments