வடக்கில் பிளவுண்டு ஜதேக மற்றும் சுதந்திரக்கட்சி?


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசியக்கட்சிகள் வடக்கில் பிளவுண்டு தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றமு.பொதுஜனபெரமுன வடக்கில் நேரடியாக களமிறங்கவில்லை.எனினும் அதன் பங்காளிகளான அங்கஜன் இராமநாதன் சுதந்திரக்கட்சியின் கை சின்னத்திலும் ,டக்ளஸ் தேவானந்தா வீணை சின்னத்திலும் போட்டியிட தயாராகியுள்ளனர்.

இதனிடையே ஜக்கிய தேசியக்கட்சியும் இரண்டாக பிளவுண்டுள்ளது.முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ரணிலின் யானை சின்னத்திலும்,மறுபுறம் சஜித் பிரேமதாசா தரப்புக்கள் ரெலிபோன் சின்னத்திலும் தனித்து போட்டியிடுகின்றன.

சஜித் பிறேமதாசாவின் கூட்டின் யாழ்.அமைப்பாளராக முன்னனி சமூக செயற்பாட்டாளர் கணேஸ் வேலாயுதம் நியமிக்கப்பட்டுள்ளார்.அக்கட்சியில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் உமா சந்திரபிரகாஸ்,முன்னாள் வடமாகாணசபையின் சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவர் மற்றும் சுமந்திரனின் வாக்கு வங்கியை ஆட்டங்காண வைக்கும் முன்னணி விளையாட்டு வீரரென பெரும் அணியொன்று களமிறங்கவுள்ளது. 

No comments