வதந்தி பரப்பிய இருவர் கைது

கொரோனா வைரஸ் தொடர்பில் முகநூலில் போலி செய்தி பரப்பிய இருவர் ராகமை மற்றும் பண்டாரகம பகுதியில் வைத்து இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மேலும் 40 தொடர்பில் விசாரணைகள் நடைபெறுகிறது என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன் வைரஸை மறைக்க முயன்ற ஒரு நோயாளி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அஜித் தெரிவித்தார்.

No comments