ஈழத்தின் ஆளுமை மறைந்தது!

ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான, எழுத்தாளர் நீர்வை பொன்னையன் இன்று (26) காலமானார்.

யாழ்ப்பாணம் நீர்வேலியினை பிறப்பிடமாக கொண்ட அவர் ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் தமிழ் இலக்கிய பரப்பிலே தனது காலத்தினை செலவழித்து, தனது கடைசி காலம் வரை எழுதிக்கொண்டிருந்தவராவார்.

சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் நாடகங்கள் என எழுத்துலகிற்கு பல்வேறு படைப்புகளை தந்த அவர், ஓர் இடதுசாரியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவராவார்.

இவரது மேடும் பள்ளமும் (1961), உதயம் (1970), மூவர் கதைகள் (1971), பாதை (1997), வேட்கை (2000), உலகத்து நாட்டார் கதைகள் (2001), முற்போக்கு இலக்கிய முன்னோடிகள் (2002), நாம் ஏன் எழுதுகின்றோம்? (2004) போன்ற படைப்புகள் ஈழத்து இலக்கிய பரப்பில் வரவேற்ப்பினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments