இதொகா வேட்பாளர் விபரம் வெளியானது

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் விபரங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் ஆறுமுகன் தொண்டமான், மருதபாண்டி இராமேஸ்வரன், இராஜதுரை ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்கவுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், கண்டி மாவட்டத்தில் பரத் அருள்சாமியும், பதுளை மாவட்டத்தில் செந்தில் தொண்டமானும் போட்டியிட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதனை தவிர, தேசியப்பட்டியல் ஊடாக இருவருக்கு நாடாளுமன்றம் செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments