கூட்டமைப்பில் அம்பிகா?

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான அம்பிகா சற்குணநாதன் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

நேற்று (06) நள்ளிரவுடன் அவர் அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிடவே அவர் பதவி விலகியுள்ளார்.

இதேவேளை இன்று (07) காலை வானொலி போட்டி ஒன்றில் பேசிய அம்பிகா, “நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கான முக்கிய கடமை, மக்களுக்கு சேவை செய்வதாகும். என்னைப் பொறுத்தவரை, எமது கடமை என்ன? நாம் ஏன் நாடாளுமன்றுக்கு சென்றோம்?, நாடாளுமன்ற செயற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற மனப்பான்மையில் இருக்க வேண்டும். நன்றாக படித்திருந்தால் அல்லது சமூகசேவை செய்திருந்தால் தான் நாடாளுமன்றம் செல்லலாம் என்ற நோக்கில் பார்ப்பதை விட மேற்கூறியதே முக்கியம் – என்றார்.

இதேவேளை கூட்டமைப்பு சார்பில்,

மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈஸ்வரபாதம் சரவணபவான், சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தாத்தன் ஆகியோருடன் ப.கஜதீபன், குருசாமி சுரேந்திரன், அ.தபேந்திரன் மற்றும் சசிகலா ரவிராஜ் ஆகியோரும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க உள்ளனர்.

No comments