கட்சி கூட்டத்தில் பேசுவேன்:சீ.வீ.கே?


இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்ந்த ஒரு கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை விமர்சிப்பது பொருத்தமில்லை. இது குறித்து நான் கட்சி மட்டத்தில் பேசுவேன் என அக்கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் நடைபெற்ற சுமந்திரன் பங்குபற்றிய கூட்டம் ஒன்றில் மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன், மாவை சேனாதிராஜாவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

தனது பதவி காலத்தில் வெறுமனே ஆறேழு தரம் சொகுசு வாகனம் வாங்கியதை தவிர மாவை சேனாதிராசா என்ன செய்தார் என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனிடையே தங்களுடைய கட்சிக் கூட்டத்தில் தங்களுடைய கட்சித் தலைவரை விமர்சிப்பது என்பது கண்டிக்கத்தக்கது எனவும், இவ்வாறு விமர்சிக்கப்படுகின்ற கூட்டங்கள் தேவையில்லை. இந்த விடயம் தொடர்பாக கட்சிக்குள் பேசுவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போது எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையில் கொழும்பு மற்றும் இந்திய இறக்குமதிகள் தொடர்பாகவும் வித்தியாதரன் விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments