கொரோனாவில் இருந்து 70 ஆயிரம் பேர் மறுபிறப்பு?

சீனாவின் – வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தி வருகிறது.

இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை 25 நாடுகளில் (இளவரசி கப்பல் அடங்கலாக) 4,299 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி,

- சீனா – 3,158
- இத்தாலி – 631
- ஈரான் – 291
- தென் கொரியா – 61
- ஸ்பைன் – 36
- பிரான்ஸ் - 33
- அமெரிக்கா – 31
- ஜப்பான் – 12
- டைமன்ட் இளவரசி (கப்பல்) – 7
- ஈராக் – 7
- பிரித்தானியா - 6
- நெதர்லாந்து - 3
- ஹொங் கொங் - 3
- அவுஸ்திரேலியா - 3
- சுவிஸ் - 3
- சன் மரினோ - 2
- ஜேர்மன் – 2
- தாய்லாந்து, தாய்வான், எகிப்த், லெபனான், ஆஜென்டீனா, பிலிப்பைன்ஸ், பனாமா, மொரோக்கோ - 1

மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இதேவேளை 119 நாடுகளில் (இளவரசி கப்பல் அடங்கலாக) இப்போது வரை 48,358 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் இதுவரை 70,876 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments