காெராேனா தாக்கியவரின் குடும்பம் வீட்டு காவலில்?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த நபரின் குடும்ப உறுப்பினர்களை அவர்களின் வீட்டிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ​தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அங்கொடை ஆதார வைத்தியசாலையின் தொற்று நோய் தடுப்பு பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவரின் குடும்பத்தினரை வீட்டுல் தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்ஹ குறிப்பிட்டுள்ளார்.

No comments