ரவி மனுவை விசாரிக்க மூன்று நீதிபதிகள் நியமனம்

கைதுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்க உட்பட நால்வர் தாக்கல் செய்த ரீட் மனுக்களை பரிசீலிக்க மூன்று பேர் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.

ரவி கருணாநாயக்க, பேர்ப்பச்சுவல் ட்சரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ், மத்திய வங்கியின் அதிகாரிகளில் ஒருவரான சங்கரப்பிள்ளை பத்மநாதன் மற்றும் அவரின் சட்ட ஆலோசகரான சமன்குமார ஆகியோர் நேற்றைய தினம் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனு இன்று (11) விசாரணைக்கு வந்த போது சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, மூவரடங்கிய நீதியரசர்கள் கொண்ட குழுவை நியமிக்குமாறு மேற்முறையீட்டு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

அவரது வேண்டுகோளினை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் ரீட் மனுக்களை பரிசீலிக்க மூன்று பேர் கொண்ட குழுவை நியமிப்பதாக அறிவித்தது.

No comments