இதுவரை 10 பேருக்கு மட்டுமே கொரோனா?

இலங்கையில் நாடு முழுவதிலுமுள்ள வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுச் சந்தேக நபர்கள் 133 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் 45 பேர் அங்கொடை தொற்று நோயியல் பிரிவில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரிட்ஜ்வே சீமாட்டி வைத்தியசாலையிலும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 4 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இன்று (15) காலை 10 மணி வரை நாட்டில் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments