ராஜிதவுக்கு மீண்டும் சிக்கல்; கொரோனாவில் வந்த வினை?

கொரோனா தொடர்பில் போலியான கருத்தை வெளியிட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு (சிசிடி) விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

"கொரோனா வைரஸினால் மூவர் மரணித்தனர்" என்று சரத் பொன்சேகாவும், "ஒரு பகுதி பாடசாலை சிறுவர்கள் கொரோனா வைரஸால் இனங் காணப்பட்டனர்" என்று ராஜித சேனாரத்னவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இருவரது கருத்தும் போலியானது. அவர்களது கருத்து தொடர்பிலான காணொளி எமக்கு கிடைத்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments