மேலும் மூவருக்கு கொரோனா

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெர்மனிக்கு சுற்றுலா சென்று நாட்டிற்கு வருகை தந்த 41 வயதான நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இவர் தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை, கந்தகாடு கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இத்தாலியிலிருந்து நாட்டை வந்தடைந்த 37 வயதான ஒருவரே கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த நபர், பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, கந்தகாடு கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த மற்றுமொருவரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாலியிலிருந்து நாட்டை வந்தடைந்த 43 வயதான நபர் தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments