வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்ட பயணிகள்?

கொரனா தொற்று மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 213 பேர் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டு பம்பைமடு இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வெளிநாட்டவர்கள் இன்று மாலை 6.30 இற்கு அழைத்து வரப்பட்டனர்.
பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் 5 பேரூந்துகளில் கொரோனா தொற்று ஆய்வுக்குட்படுத்தும் நடவடிக்கைக்கு 213 பேர் வவுனியா, பம்மைமடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொற்று நோய் ஆய்வு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

No comments