கொரோனா வதந்தி- பொலிஸ் விடுத்த கடும் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் அவ்வாறு வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கிய கொழும்பை சேர்த்த நபரின் மகனது உடல் நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் பரவிய வதந்தியால் மகன் பயிலும் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் பீதி ஏற்பட்டிருந்தது.

இந்நிலையிேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது விடயத்தில் பொதுமக்கள் உத்தியோகபூர்வ செய்திகளை மட்டும் நம்புமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments