மகனுக்கும் கொரோனாவா? அரசு பதில்

கொரோனா வைரஸ் தாக்கிய கொழும்பை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியின் மகனுக்கு கொரோனா தாக்கம் இல்லை என்று அரச தகவல் திணைக்களம் இன்று (12) அறிவித்துள்ளது.

குறித்த நபரின் மகனது உடல் நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் பரவிய வதந்தியால் மகன் பயிலும் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் பீதி ஏற்பட்டிருந்தது.

சுகாதார அதிகாரிகளின் தகவல்படி குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் 12ம் தரத்தில் பயிலும் தனது மகனுடன் குறைந்தபட்ச தொடர்பை கொண்டிருந்தார்.

அவரது மகனிடம் கொரோனா வைரஸ் அறிகுறிகள் காணப்படவில்லை. அவருக்கு வைரஸ் தாக்கும் சாதகம் இல்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக அங்கொடை தொற்று நோய் தடுப்பு பிரிவில் அவர் கண்காணிக்கப்படுகிறார் - என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அவரது பெற்றோர் அச்சமடைய வேண்டியதில்லை என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments