இலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்!

தமிழர் தாயகத்தில் அரங்கேறும் மெல்ல கொல்லும் சதி

உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்கவைத்து ஆட்டம் காணவைத்துள்ள COVID - 19 எனப்படும் கொரோனா வைரஸ்  தொற்று நோய் வடகிழக்கு தமிழர் தாயக
த்துக்குள் திட்டமிட்டு மெதுமெதுவாக பரப்பப்படுகிறதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

உலகம் முழுவதும் துரித வேகத்தில் பரவியுள்ள கொரோனா வைரஸ் இலங்கையிலும் தொற்றியுள்ள இந்த நேரத்தில்நாடு முழுவதையும் மிக அவதானத்துடன் கையாள வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் சுகாதாரத்துறைக்கும் உள்ளது என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும் 

ஆனால் கொறோனா வைரஸ் தொற்றை  காரணமாக வைத்து  படைகளின் சர்வதிகாரத்தை இந்த நாட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் எத்தனிக்கின்றது என்ற சந்தேகம் நாளுக்கு நாள் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்த விடயத்தில் தமிழர் தரப்புக்கள் மிக மிக அவதானத்துடன் இருக்க வேண்டியது  ஒவ்வொருவரினதும் பொறுப்பு ஆகும்தமிழ் இனத்தை மீண்டும் மீண்டும் பலியாக்கி அரசியல் இலாபம் தேடுவோரை நாம் இனங்கண்டு அவர்களுக்கு எதிராக போராட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

கொரோனா வைரஸ் - இலங்கையின் தற்போதைய நிலை

கடந்த ஒருவாரத்தில் (23 ஆம் திகதி வரை)  97 பேர் கொரோனா நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள்அதில் ஒருவர் குணமடைந்துள்ளார்.

அதாவது ஹம்பகாகொழும்புபுத்தளம்குருநாகல்களுத்துறைஇரத்தினபுரிகாலிகேகாலைமாத்தறைமட்டக்களப்புபதுளைஅனுராதபுரம்யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் நோய் தொற்றுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

இலங்கையில் 4 பரிசோதனை நிலையங்களே உள்ளன
கொழும்பு அங்கொடை வைத்தியசாலை , கண்டி போதனா வைத்தியசாலைகராப்பிடிய போதனா வைத்தியசாலை மற்றும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை ஆகியவற்றிலேயே கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.

நாடு முழுவதிலும்  24 வைத்தியசாலைகளில்கொரோனா வைரஸ் தாக்கம் என சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்நாடுமுழுவதும் 16  தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளனஅதில் குறிப்பாக வடக்கு  கிழக்கில் மாத்திரம் அதிகளவாக 14 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் அமைக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்கள்.

வடக்கு மாகாணத்தில் - 6  நிலையங்கள்
கிழக்கு மாகாணத்தில் - 8  நிலையங்கள்
வடக்கு கிழக்கு மாகாணங்களில்  14 தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளனவடக்கு - வவுனியாவிற்கு கடந்த மார்ச்  மாதம் 13 ஆம் திகதி வெளிநாட்டவர்கள் முதன்முறையாக கொண்டுவரப்பட்டனர்.

வடக்குமாகாணம்

பம்பைமடு பெண்கள் இராணுவ முகாம் - 265 பேர்
பெரியகட்டு இராணுவ முகாம் - 134 பேர்
பூவரசன்குளம் வேலங்குளம் விமானப்படை முகாம் -  210 பேர்
முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை முகாம் -  223 பேர்   இரணைமடு விமானப்படை முகாம் -  172 பேர்
யாழ்.கொடிகாமம் 522 ஆவது படை முகாம் -  233  பேர் 

கிழக்கு மாகாணம் -
மட்டக்களப்பு புணானை பல்கலைக்கழகம் - 650 பேர்
கந்தக்காடு  தனிமைப்படுத்தல் நிலையம்– 370 பேர்
அத்துடன் மட்டக்களப்பு அம்பாறையில் உள்ள  படை முகாம்களிலும்  சுமார் 390 பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் 800க்கு அதிகமானவர்கள் பௌத்த துறவிகள் ஆகும். 

அந்த வகையில் வடக்கு கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் சுமார் 2600 க்கு மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்  அங்கிருந்து பலர் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களாக  இனங்காணப்பட்டுள்ளனர்அத்துடன் பலாலி விமான நிலையத்துக்கு அருகில் ஒரு தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படுவதுடன் வேறு பகுதிகளிலும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் இராணுவத்தின் சர்வாதிகாரம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டுமே என தெளிவாகத் தெரியவருகிறது.

தனிமைப்படுத்தும் முகாம்களை வடக்கு கிழக்கு பகுதிகளில் அமைப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

ஏனெனில் எந்தவொரு நோயாளியும் தமிழர் பிரதேசத்தில் அடையாளப்படுத்தப்படாத நிலையில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்துவதற்காக தமிழர் பகுதிக்கு அழைத்துவருவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அதாவது வவுனியாமட்டக்களப்பு போன்ற இடங்களில் பொதுமக்கள் தமது எதிர்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்.

ஆனால் அனைத்து தரப்பினருடைய எதிர்ப்புக்களையும் மீறி கொழும்பில் இருந்து பல மைல்கள் தூரம் கடந்து வந்து நெளிநாட்டவர்களை வடக்கு கிழக்கில் தங்கவைத்துள்ளார்கள்.

பொதுமக்களின் எதிர்ப்பு தொடர்வதால் அனைத்து தனிமைப்படுத்தும் நிலையங்களும் படைமுகாம்களுக்குள்ளேயே அமைக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் வடக்கு கிழக்கில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் குறித்த தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு மக்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தும் முகாம்களை அமைப்பதற்கு தென்னிலங்கையில் எதிர்ப்பு

இதே போன்று நீர்கொழும்பில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஒரு தனிமைப்படுத்தும் நிலையத்தை அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட போது அரசியல் தலையீட்டின் காரணமாக அங்கு அமைப்பது நிறுத்தப்பட்டது.

தென்னிலங்கை வாக்குகளை சிதறவிடாமல் இருப்பதற்கு வடக்கு கிழக்கில் தனிமைப்படுத்தும் முகாம்களை அதிகமாக அமைத்துள்ள  அரசு அங்கு வெளிநாட்டவர்கள் மற்றும் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது

அங்கிருந்து நோய் தொற்று உள்ளவர்கள் அடையாளப்படுத்தப்பட்டும் உள்ளனர்இது மக்களிடையே பெரும் பதட்டநிலையையே தோற்றுவித்துள்ளது.

தமிழர் பகுதிகளில் தாமதமாகும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள்

குறிப்பாக புத்தளம்நீர்கொழும்புஜாஎல பகுதிகளில் கொரோனா தொற்றுடன் நோயாளிகள் இனங்காணப்பட்டதால் அங்கு உடனடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அப்பகுதி மக்களை தரம்பிரித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.

ஆனால் மட்டக்களப்பில் நோய்த்தொற்று உள்ள நபர் ஒருவர் கடந்த 16 ஆம் திகதி இனங்காணப்பட்டுள்ளார்ஆனால் அங்கு ஊரடங்கு உத்தரவோ விசேட சோதனைகளோபரிசோதனைகளோ இடம்பெறவில்லைஅந்த நோயாளி வெளிநாட்டவர் என்றும் அவர் சமூக மட்ட அமைப்புக்களுடன் கடந்த 14,15 ஆம் திகதிகளில் பல கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார் என்று தெரியவந்த நிலையிலும் அசண்டையீனமாக உரிய தரப்பினர் செயற்பட்டுள்ளார்கள்தற்போது அப்பகுதிகளில் 6000 க்கும் மேற்பட்டடோர் தனிமைப்படுத்தப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதே போன்று கடந்த 10 ஆம் திகதி சுவிஸ் நாட்டில் இருந்த ஒரு மத போதகர் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு வருகை தந்து அங்கு தங்கியுள்ளார். 15 ஆம் திகதி மக்களை அழைத்து போதனையும் மேற்கொண்டுள்ளார்இப்போது அவர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உட்பட்டுள்ளார்இவர் இலங்கைக்குள் வரும் போது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவில்லைகுறித்த  போதகருடன் வேலை நிமித்தம் கலந்துரையாடலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் இந்த நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்

இதனால் 2000 க்கும் அதிகமானவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்இவ்வாறான தாமதமான செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

விழிப்புடன் இருந்த மக்கள் மத்தியில் கொரோனாவை பரப்ப சதியா?

வடமாகாண சனத்தொகையில் 50  வீதமானவர்கள் புலம்பெயர் தேசங்களில் வாழ்கிறார்கள்இந்த நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பலர் அண்மையில் வடக்குக்கு வந்துள்ளார்கள்யாழ் மாவட்டத்தில் மாத்திரம் இந்த மாதத்தில் 1320 பேர் வருகைதந்துள்ளார்கள்

இவர்கள் எவரும் தனிமைப்படுத்தப்படவில்லைவடக்கில் தனிமைப்படுத்தும் நிலையங்கள் இருந்தும் இவர்கள் வடக்குக்குள் வெளிப்படையாக நடமாடுகிறார்கள்இது நாழுக்கு நாள் மக்கள் மத்தியில் ஒரு அச்ச நிலையையே தோற்றுவித்திருந்ததுவடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள் வந்த  வெளிநாட்டவர்களை ஏன் தனிமைப்படுத்தவில்லை என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தி தொடர்பு தடமறிதல் மற்றும் நோய் பரிமாற்றத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர்கள் கடுமையாகத் தெரிவித்துள்ள நிலையிலும்ஆரம்பத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லைநோயாளர்களை இனங்கானும் நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெறவில்லைநாடளாவிய ரீதியில் கடந்த 22  ஆம் திகதிக்கு பின்னரே  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு கிழக்கில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தும் யாழ்ப்பாணத்தில் ஒரு மத போதகர் தன்னை தனிமைப்படுத்தாமல் யாழ்ப்பாணத்துக்குள் வந்து மருத்துவர்களின் ஆலோசனைகளை மீறி கடந்த 15 ஆம் திகதி ஜெபக்கூட்டத்தை நடாத்தியுள்ளார்அந்தக்கூட்டத்துக்கு  வடக்கி;ல் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மக்களை அழைத்துள்ளார்அத்துடன் வேறு பலருடனும் இவர் நோய் இருக்கும் போதே கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

தமிழர் தமது உரிமை சார்ந்து ஏதாவது நிகழ்வுகளை ஏற்பாடு செய்தால் அது தொடர்பான விபரங்களை உடனடியாக திரட்டும் அரச , இராணுவ புலனாய்வுத்துறையினர் எதற்காக இந்த கூட்டம் சட்டத்தை மீறி நடைபெற இருந்தும் அதை தடுத்து நிறுத்தவில்லைநாட்டு மக்களின் பாதுகாப்பு என தெரிவித்து வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள பாதுகாப்புப்படைகள் தமிழ் மக்கள் விடயத்தில் அசண்டயீனமாக செயற்பட்டுள்ளார்கள்.

வடக்கில் முதன் முறையாக இனங்காணப்பட்ட கொரோனா நோயாளி

இராணுவத்தின் முற்றுகைக்குள் வடக்கு 

யாழ் மாவட்டத்தில் முதலாவதாக இனங்காணப்பட்ட நோயாளி மேற்குறித்த மதபோதகருடன் தொழில் ரீதியாக கடந்த 15 ஆம் திகதி ; யாழ்ப்பாணத்தில் உரையாடியுள்ளார்குறித்த போதகர் சுவிஸ் நாட்டுக்கு சென்றபோது அவருக்கு நோய்த்தொற்று இருப்பதாக செய்தி வெளியாகியிருந்த நிலையில் போதகருடன் உரையாடிய நபர் சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் இந்த நிலையில்  22 ஆம் திகதி இந்த நபருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனால் 2000 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இராணுவத்தின் முற்றுகைக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்வடக்கு மாகாணம் முற்று முழுதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

வடக்கை முடக்குவதாக அறிவித்த இராணுவத்தளபதி 

கொரோனா நோயாளி யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்டுள்ள நிலையில் நோய் தொற்று அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுவதால் வடக்கை முடக்கும் நிலை ஏற்படும் என இராணுவத்தளபதியும் கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு நிலையத்தின் தலைவருமான  லெப்டினன் ஜெனரல் சர்வேந்திர சில்வா அறிவித்துள்ளார்பாதுகாப்பு ஏற்பாடுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தி இருந்தால் இந்த இக்கட்டான நிலை வடக்கு மக்களுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கிழக்கில் பல்கலையை கைப்பற்றுவதாநோயாளர்களை காப்பாற்றுவதா அரசின் முக்கிய நோக்கம்?

மட்டக்களப்பு புணானை பல்கலைக்கழகத்தை கைப்பெற்றுவது அரசுக்கு முக்கிய  நோக்கமாக இருந்தாலும் தற்போது மனித உயிர்களே முக்கியமாக இருக்கிறதுஆரம்பத்தில் அதி வேகமாக குறித்த பல்கலைக்கழகத்தை கைப்பற்றிய இராணுவத்தினர் அங்கு மக்களின் எதிர்ப்பையும் மீறி கொரோனா சிகிச்சை நிலையத்தை அமைக்கவுள்ளதாக அறிவித்தனர்

அதில் 2000 – 2500 வரையான நோயாளர்களை பராமரிக்க முடியும் என அறிவித்திருந்தனர்.  ஆனால் இதுவரை  அந்த வைத்தியசாலையில் நோயாளர்களை பராமரிப்பதற்கான உரிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை

மருத்துவ வசதிகளை ஏற்படுத்தாது வடக்கு கிழக்கில் அதிக தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பதன் நோக்கம் என்ன?

வடக்கு கிழக்கில் உள்ள 8 வைத்தியசாலைகளிலும் கொரோனா தொற்று நோயாளர்களை பராமரிப்பதற்கான மருத்துவம் மற்றும் பராமரிப்பு வசதிகள் மிக மிக குறைவாகவே உள்ளதுஅதை மருத்துவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்இந்த நிலையில் தனிமைப்படுத்தும் நிலையங்களில் உள்ளவர்களுக்கு நோய் கண்டறியப்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனைக்கே கொண்டுசெல்லப்படவேண்டும்.

  இதனால் பாரிய பாதிப்புக்கள்  ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள்உள்ளன.

மேலும் இந்த தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அதனைசூழவுள்ள மக்களையே பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை

கொரோனாவை எதிர்கொள்வதற்கு வடக்கு கிழக்கிலுள்ள  மருத்துவத்துறை தயாரா?


வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் குறித்த நோயாளர்களை பராமரிப்பதற்கான முன்னேற்பாடுகள் எவையும் சரியான முறையில் தயார்படுத்தப்படவில்லைஇது திட்டமிட்ட அசமந்த போக்கையே காட்டுகிறது.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் கோரோனா தனிமைப்படுத்தல் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுஆனால் அதில் சிகிச்சைக்கான உரிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்பதுடன் மிக குறைந்தளவு நோயாளர்களே அங்கு பராமரிக்க முடியும் .

  அதிலும் மிக முக்கியமாக அங்கு பணிபுரியும் சுகாதார ஊழியர்களுக்கு தேவையான தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள்  மற்றும் தேவையான பிற பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை,அவர்களுக்கு  உரிய பயிற்சிகளும் வழங்கப்படவில்லை.

இதை அந்தந்த மாவட்டத்தில் உள்ள வைத்தியர்களும் மக்கள் பிரதிநிதிகளும் தொடர்சியாக கூறி வருகின்றனர்ஆனால் இதுவரை உரிய ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவில்லை என்பதே உண்மையான நிலைப்பாடு.

வடக்கு கிழக்கில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையிலும் வைத்தியர்களுக்கோ சுகாதார ஊழியர்களுக்கோ பொதுமக்களுக்கோ உரிய பாதுகாப்பு இன்னமும் வழங்கப்படாமல் தமிழ் இனத்தை அழிப்பதற்கு அரசு அசண்டையீனமாக செயற்படுகிறது என்பது வெளிப்படையாக தெரியவரும் நிலையில் எமது மக்களின் உயிரை நாம் தான் காப்பாற்ற வேண்டும் என்ற கடமையும் பொறுப்பும் ஒவ்வொரும் தமிழ் உறவுக்கும் இருக்கின்றது என்பதை மனதில் இருத்தி எம்மை அழிக்க நினைக்கும் பெரும்பாண்மை சக்திகளின் திட்டத்தை அடியோடு அறுத்து எமக்கான உரிமைகளை பெறவேண்டும்.


எமது உறவுகளுக்கு நாமே கைகொடுப்போம் 

உலகளாவிய ரீதியில் 332 930 பேர்   கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 14510 பேர் உயிரிழந்துள்ளனர்இத்தாலி திட்டமிட்டு முன் நடவடிக்கைகளினை செய்யாதன் காரணமாக இத் தொற்றுநோயை கட்டுப்படுத்தத் தவறி அந்த நாட்டின்  குடிமக்களுக்கும் உலகத்திற்கும் பேரழிவு தரக்கூடிய விளைவுகளுக்கு காரணமாகியுள்ளதுடன் உலகின் பிற பகுதிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கின்றது.

எனவே அலட்சியம் செய்யாமலும் எம்மை சுற்றி நடக்கும் திட்டமிட்ட இன அழிப்பையும் கருத்தில் கொண்டு நாம் ஒவ்வொருவரும் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது எமது கடமை ஆகும்.

நன்றி
ஈழத்தில் இருந்து
சுடர்விழி


No comments