யுத்த கால தணிக்கை:கொரோனா கட்டுப்படவில்லையா?


கொரோனோ தொற்றுக்கான குணங்குறிகளான தடிமன் காய்ச்சல் என்றாலும் யாழிற்கு அனுப்புகிறோம். கொரோனா தொடர்பில் கருத்து
தெரிவிக்க அனுமதியில்லையென கிளிநொச்சி வைத்திய அதிகாரி உண்மையினை போட்டுடைத்துள்ளார்.

கொரோனோ தொடர்பில் யுத்த கால தணிக்கையினை கோத்தா அரசு கடைப்பிடிக்கின்றதாவென்ற அச்சத்தின் மத்தியில் காத்தான்குடி நகரம் வைரஸ் தாக்கத்தினால் அபாய நிலையை அடைந்துள்ளதாக நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் அறிவித்துள்ளார். எனவே அங்கு அனாவசியமாக எவரும் வருவதை தவிர்க்கவும் அவர் கோரியுள்ளார். 

இதனிடையே மேலும் இருவருக்கு கொரோன வைரஸ் தொற்று 2.30 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளது. தொற்றாளர்கள் 109 ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

யாழ்.போதானவைத்திய சாலைக்கும் புதிய ஆட்கள் கொரோனோ தொற்று சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments