கடல்வழி ஆட்கள் வர முயலலாம்?
வடபகுதியில் கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு இலங்கை கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
வட பகுதியில் அதிகளவான மக்கள் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு செயற்படுவதனால் ஊரடங்கு வேளையிலும் நாம் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கி யுள்ளோம் அந்த சந்தர்ப்பத்தினை தவறான வழியில் பயன்படுத்த வேண்டாம் என இலங்கை கடற்படை தளபதி வடக்கு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நமது நாடானது இந்திய நாட்டிற்கு மிக அண்மையில் உள்ளது அதிலும் க வடபகுதியானது இந்தியாவிற்கு மிக அண்மையில் உள்ளது கடலுக்கு மீன் பிடிக்கச் செல்பவர்கள் உங்கள் வாழ்வாதாரத்திற்கான மீன்களை பிடித்து விட்டு கரையில் வந்து உங்கள் குடும்பங்களை பார்த்தால் உங்களுக்கு நல்லதாக அமையும் அதை விடுத்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து வருபவர்களை அல்லது இந்தியா செல்பவர்களை ஏற்றி இறக்கும் தொழிலில் நீங்கள் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. வடக்கு கடலில் மீன்பிடித் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் குறித்த விடயத்தை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார் தற்பொழுது கொரோனா தாக்கம் ஏனைய நாடுகளிலும் அதிகரித்துள்ள நிலையில் கடற்படையும் விமானப்படையும் இணைந்து இலங்கையின் சகல கடற்கரையோரங்களிலும்கடலிலும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம் வேறு நாட்டில் இருந்து இங்கே கடல் வழியாகவும் தப்பி வருவார்கள் ஏனெனில் தற்போது விமான நிலையங்கள் இங்கே
மூடப்பட்டு காணப்படுகின்றது.
எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கடல்வழியாக வேறு நாட்டவர்கள் சட்டவிரோதமாக இங்கே வர முடியும் இதனால் வேறு நாட்டவர்கள் நமது மீனவர்களை பயன்படுத்தி இந்த நாட்டிற்குள் வர முயற்சிப்பார்கள் அதற்கு இடம் கொடுக்காதீர்கள் நமது நாட்டை நாமே காப்பாற்ற வேண்டும் என்று முதல் நாம் விசேட நடவடிக்கை ஒன்றின் ஆரம்பிக்க உள்ளோம் குறிப்பாக வடபகுதி கடற்கரை ஓரங்களில் மேலதிக பாதுகாப்பை உறுதிப்படுத்தவுள்ளோம் எனவே இதனைக் கருத்தில் கொண்டு வடபகுதி மீனவர்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment