சாவகச்சேரி மக்களுக்கான அத்தியாவசிய அறிவித்தல்

இன்று (24) மதியம் 12 மணியுடன் தென்மராட்சி - சாவகச்சேரி மரக்கறி சந்தை மூடப்படுவதுடன், ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் மரக்கறி சந்தை திறக்கப்படாது என்று இன்றைய விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மாற்று திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

- தபாற்கந்தோர் வீதியில் மகளிர் கல்லூரி முன்பாகவும் மற்றும் பெருங்குளம் சந்தியிலும்,
- கச்சாய் வீதியில் வீரபத்திரர் கோவிலடி மற்றும் முருகமூர்த்தி கோவிலடியிலும்,
- டச்சு வீதியில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பாகவும்,
- நுணாவில் சர்வசாதனா ச.ச.நிலையம் மற்றும் விமலா இரும்பகம் முன்பாக உள்ள 6 கால் மடத்தடியிலும்,
- மீசாலை சந்தியிலும்,
- நுணாவில் மேற்கு துர்க்கை அம்மன் கோவிலடி.

உள்ளிட்ட இடங்களில் மரக்கறி விற்பனைக்குரிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments