தமிழ் அரசியல் கைதிகள் சிறை மாற்றப்பட்டனர்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று (23) இரவு யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அண்மையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்ற வதந்தி காரணமாக சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இருவர் கொல்லப்பட்டனர்.

இந்த அசாதாரண சூழ்நிலையை அடுத்து தமிழ் அரசியல் கைதிகளை அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு பாதுகாபுக்காக மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இதற்கமைய அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 11 அரசியல் கைதிகள் முதற்கட்டமாக யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.

No comments