கனடா பிரதமர் மனைவி சோபிக்கும் கொரோனா?

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் ஜஸ்டின் ட்ரூடோ முன்னெச்சரிக்கையாக தன்னைத்தானே தனிமைப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments