கொரோனாவால் ஆஸ்திரேலியாவும் முடங்கியது!!


ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று நோய் அதிகரித்து வருவதையடுத்து அங்கும் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்தியாவசியமற்ற சேவைகளான உணவங்கள், இரவு கேளிக்கை விடுதிகள், மதுபான அருந்தகங்கள், தேநீர் அருந்தகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களை இன்று திங்கட்கிழமை இரவு முதல் மூட பிரதமர் பிரதமர் ஸ்காட் மோரிசனை உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் பல்பொருள் அங்காடிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் வீட்டு விநியோக சேவைகளில் தொடர்ந்து செயற்படும் என்று கூறியுள்ளார்.

பள்ளிகளில் மாணவர்கள் ஒரு வருடத்தை இழப்பதை நான் விரும்பவில்லை என்று கூறிய பிரதமர், பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என்றார். ஆனால் பெற்றோர்கள் விரும்பினால் தங்கள் குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்க முடியும் என்றார் ஸ்காட் மோரிசன்.

No comments