சுனில் விடுதலை! காட்டமானது ஐநா

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது.

ஐநா மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட்டின் பேச்சாளர் ருபேட் கொல்விலே இதனை தெரிவித்துள்ளார்.

மிருசுவில் படுகொலைக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை வழங்கப்பட்டுள்ளமை குறித்து ஐநா மனித உரிமை ஆணையாளர் குழப்பமைடைந்துள்ளார் என பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பொதுமன்னிப்பு என்பது பாதிக்கப்பட்டவர்களிற்கு செய்யப்பட்ட அவமரியாதையாகும். யுத்த குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம், ஏனைய பாரிய மனித உரிமை மீறல்கள் போன்றவற்றிற்கு அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறலை வழங்குவதற்கு இலங்கை தவறிவிட்டது என்பதற்கான மற்றுமொரு உதாரணம் இதுவெனவும் - குறிப்பிட்டுள்ளார்.

No comments