இத்தாலியில் இன்று 969

இத்தாலியில் இன்று (27) மட்டும் கொரோனா (கொவிட்-19) வைரஸ் காரணமாக 969 பேர் பலியாகியுள்ளனர்.

இது கொரோனா காரணமாக நாடு ஒன்றில் ஒரே நாளில் அதிகளவானோர் பலியான முதல் சந்தர்ப்பமாக பதிவாகியுள்ளது.

இதன்படி இப்போது வரையில் இத்தாலியில் 9,134 பேர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை இன்று ஸ்பைனில் 569 பலியாகியுள்ளனர்.

அத்துடன் உலகளவில் 26,447 பேர் பலியாகியுள்ளதுடன், 129,991 பேர் குணமடைந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

No comments