பெயர் வைக்க அலையும் கூட்டமைப்பு?


அரச அமைச்சர் டக்ளஸின் கோரிக்கை மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரபிரகாரம் தமிழ் அரசியல் கைதிகள் யாழ்ப்பாணத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு அடித்துப்பிடித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உரிமை கோரியுள்ளார்.

டக்ளஸின் கோரிக்கைக்கு அமைவாக அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 11 பேரில் 10 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் , மற்றைய அரசியல் கைதியின் வேண்டுகோளுக்கிணங்க அவர் மகசின் சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதே போன்று மகசீன் மற்றும் ஏனைய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  தமிழ் அரசியல் கைதிகளையும் அவ்வாறு இடமாற்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

அண்மையில் அனுராதபுர சிறை குழப்பத்தின் போது தமிழ் அரசியல் கைதிகளை காப்பாற்ற டக்ளஸ் நேரடியாக நடவடிக்கைகளை எடுத்ததாக அரசியல் கைதிகளது குடும்பங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் அனுராதபுரம் சென்று அரசியல் கைதிகளை சந்திக்க கூட அக்கறை செலுத்தாத சாள்ஸ் நிர்மலநாதன் தற்போது இடமாற்றத்திற்கு உரிமை கோரியுள்ளமை கேலிக்குள்ளாகியுள்ளது.

No comments