இலங்கை காவல்துறையே சுவிஸ் போதகரை பாதுகாத்ததா?


சுவிஸ் நாட்டிலிருந்து வந்த போதகரை தனிமைப்படுத்தாது யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்து இலங்கை காவல்துறை தான் என
வடக்கு மாகாண ஆளுநர் பகிரங்கமாக குற்றஞ்சுமத்தியுள்ளார்.அவரை காவல்துறையே காப்பாற்றியதாகவும் பின்னர் திருப்பி அனுப்பி வைத்ததாகவும் வடக்கு மாகாண ஆளுநர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று கொழும்பிலிருந்து திரும்பிய அவர் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட நடவடிக்கை மிக விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.

முன்னதாக குறித்த போதகரை பற்றி செய்தி வெளியிட்டதாக சுகாதாரசேவைகள் பணிப்பாளரை காவல்துறை அதிகாரியொருவர் அச்சுறுத்தியமை வைத்திய துறையிடம் கடுமையான சீற்றத்தை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments