311 பேர் வீடு திரும்பினர்

நாடு திரும்பிய நிலையில் முதல் கட்டமாக தனிமைப்படுத்தப்பட்ட 311 பேர் 14 நாட்கள் கண்காணிப்பின் பின்னர் இன்று (24) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என்று இராணுவம் அறிவித்துள்ளது.

இதன்படி கந்தக்காடு முகாமில் இருந்து 108 பேரும், புணானை முகாமில் இருந்து 203 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அது குறித்து நேற்று (23) இரவு கருத்து தெரிவித்த இராணுவ தளபதி சவேந்திர சில்வா,

காய்ச்சல் இருந்தால் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாது இருந்தால் கண்மூடித்தனமாக அச்சப்பட எந்தக் காரணமும் இல்லை. கூடுதல் நடவடிக்கையாகவே அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் சமூகத்தில் ஆள்களுக்கு இடையே இடைவெளியை பேண அறிவுறுத்தப்பட்டுள்ளது - என்றார்.

No comments