யாழ்ப்பாணம் அபாயத்தின் விளிம்பில்


வடக்கில் கொரானா  எந்நேரமும் முனைப்படையலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் போதிய மருத்துவ உபகரணங்களோ அடிப்படை வசதிகளோ ஏற்படுத்தி வழங்கப்படவில்லையென மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை முன்வைத்த அரச மருத்துவ சங்க வடமாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் யாழில் மக்களை தனிமைப்படுத்த முன்வைத்த கோரிக்கைகளை கூட நிறைவேற்றப்படவில்லையென தெரிவித்தார்.

குறிப்பாக மந்திகை மருத்துவமனையில் இரண்டே இரண்டு பாதுகாப்பு உடைகளே உள்ளது.அதனை ஒரு கொரோனா நோயாளியை பார்வையிட மட்டுமே பயன்படுத்தலாம்.

அடுத்த நோயாளிக்கு என்ன செய்வதென்பது தெரியாது.
தெல்லிப்பழை வைத்தியசாலையில் அது கூட கிடையாது.
யாழ்.போதானா வைத்தியசாலையில் இருபது கட்டில்கள் உள்ளன.

ஆனால் அவசர சிகிச்கை பிரிவில் உள்ள 19 கட்டில்களும் ஏனைய நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

குறிப்பாக அத்தியாவசிய தேவையற்ற நகைகடைகள்,புடவைக்கடைகள்,கட்டடப்பொருள் கடைகளையாவது இருவார பூட்ட கோரிக்கை யாழ்.மாநகர முதல்வர் ஆனோல்ட்டிடம் முன்வைக்கப்பட்டது.

ஆனால் அவரோ அதற்கு வடக்கு ஆளுநரது அனுமதி தேவையென்றார்.வடக்கு ஆளுநரோ கொழும்பில் வீட்டிலிருக்கிறார்.
இதனால் கடைகள் பூட்டப்படவில்லை.

இன்று மன்னாருக்கு வந்துள்ள குரோனா யாழ்ப்பாணத்திற்கு வருகை தர தாமதமாக மாட்டாதெனவும் தெரிவித்தார்.

No comments