சொல்லியடித்தது கூட்டணி!


தமிழ் மக்கள் தேசிய கூட்டணி இறுதி நேரத்தில் களமிறக்கிய பெண் வேட்பாளர் அனைத்து தரப்புக்களதும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

யாழ்குடாநாட்டின் முன்னணி கல்வியியலாளரான மீரா அருள்நேசனே கூட்டணியின் வேட்பாளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.

முன்னணி தனியார் கல்வி நிலைய பணிப்பாளரான அவர் ஓய்வுபெற்ற கல்வி அதிகாரியுமாவார்.

இதனிடையே கூட்டணியின் புதிய பட்டியலில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட மத ரீதியான குற்றச்சாட்டுக்கள் சிதறடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

No comments