வடக்கில் 37?


நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலில் வடக்கு மாகாணத்தில் போட்டியிடுவதற்காக 37 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 20 வேட்புமனுக்களும், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிவதற்காக 17 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் அலுவலகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.


 தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 21 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தன.

இந்நிலையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் காலம் இன்று நாளை முடிவடையும் நிலையில் இன்று மட்டும் 17 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இவற்றில் 11 வேட்புமனுக்கள் கட்சிகள் சார்பாகவும் 6 வேட்புமனுக்கள் சுயேட்சைக்குழுக்கள் சார்பாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 31 சுயேட்சைக் குழுக்கள் கடடுப்பணம் செலுத்தியிருந்தன.

இருப்பினும் இன்று வரை 20 வேட்புமனுக்களே தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் தேர்தல் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments