தனிமைப்படுத்தப்பட்டார் அங்கேலா மேர்க்கெல்! யேர்மனியில் இருவருக்கு மேல் சேரத் தடை!

குடும்ப உறுப்பினர்களைத் தவிர இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் குழுவாக இணைவதை ஜெர்மன் கூட்டாட்சி அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை முதல்  தடை செய்துள்ளது,

நாட்டின் அதிபர் அங்கேலா மேர்க்கெல் ஊடகவியலர்களை சந்தித்து இந்த அறிவிப்பினனை கூறியதோடு தானும் தன்னை தனிமைப்படுத்திகொள்ள இருப்பதாகவும் கூறினார்,  ஏனெனில் அவருக்கு வெள்ளியன்று நிமோனியாவுக்கு எதிராக தடுப்பூசி போட்ட ஒரு மருத்துவர் ஒருவர் கொரோனோவினால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்துள்ளதாகவும் எனவே   தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திகொல்வதாக திருமதி மேர்க்கெல் கூறினார் என அவரது அலுவலம் தெரிவித்துள்ளது.

 எனினும் அதிபர் அங்கேலா மேர்க்கெல் வீட்டிலிருந்து தனது கடமைகளைச் செய்வார் என்றும், அவரை தவறாமல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுவார்.  அங்கேலா மேர்க்கெல் தனிமைப்படுத்தப்படுகிறார் என்ற  செய்தி உலக அளவில் முதன்மை பெற்று கவனிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தகது.

அத்தோடு ஜெர்மனியில் புதிய விதிகள், குறைந்தது இரண்டு வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும், மேலும் உலகளாவில் கொரொனோ நோய்த்தொற்றுகள் 300,000 ஐத் தாண்டியதாலும், இறப்பு எண்ணிக்கை 13,000 ஆக உயர்ந்ததாலும் அந்த நடைமுறைகள் கொண்டுவரப்படுள்ளன எனவும்,  ஜெர்மனியில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் படி ஞாயிற்றுக்கிழமைக்குள் கொரோனோவினால் பாதிக்கப்பட்டவர்கள்23,900 என்றும் , 90 க்கும் மேற்பட்டோர் இறந்தனர் "கொரோனா வைரஸ் வேகத்துடன் நம் நாடு முழுவதும் பரவி வருகிறது" என்று ஜெர்மன் அதிபர் சென்சலர் திருமதி மேர்க்கெல் ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி செய்தியாளர் சந்திப்பில்  கூறினார்.

No comments