பிரான்சில் பலி எண்ணிக்கை16 ! பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிடித்தது கொரோனா!

பிரான்சில் பதினாறு பேர் கொரோனா வைரஸால் இறந்துவிட்டதாக அந்நாட்டின் பொது சுகாதார சேவையின் தலைவரான ஜெரோம் சாலமன் தெரிவித்துள்ளார்.
முந்தைய எண்ணிக்கையிலிருந்து ஐந்து பேர் அதிகரித்துள்ளனர் என்றும்  கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 949 ஆக அதிகரித்துள்ளதாகவும் சாலமன் கூறினார்.

மேலும் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிரான்சின் தேசிய சட்டமன்றத்தின் இரண்டாவது உறுப்பினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார், மேலும் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நோய்க்கு பரிசோதனை செய்யப்படுகிறார்கள் என்று கீழ் சபையின் ஜனாதிபதி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. வைரஸ் தாக்கிய  இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றம் குறிப்பிடவில்லை, ஆனால் அல்சேஸின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள உள்ளூர் ஊடகங்கள் இரண்டு எம்.பி.க்களில் ஒருவர்  ஜீன் லூக் ரீட்ஸர் சுகாதார துறை சார்ந்தவர் என்றும்   தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளர் என்றும் மற்றவர் பாராளுமன்றத்தின் அறிக்கையின்படி ஒரு பெண் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments