கொரோனா! பிரான்சில் 79 பேர் பலி! 3661 பேருக்கு தொற்று நோய்!

பிரான்சில் கொரோனா தொற்று நோய்க்கு இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3661 பேர் தொற்றுக்கு நோய்க்கு
உள்ளாகியுள்ளனர்.

இதேநேரம் 100 க்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை தற்காலிமாக பிரான்ஸ் தடை செய்துள்ளது.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. பொிய விளையாட்டு நிழக்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

பிரான்சில் உள்ளூராட்சித் தேர்தலால் அரசியல் நெருக்கடியும், கொரோனோ தொற்று நோயால் சுகாதார நெருக்கடியும் எழுந்துடன் ஒரு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இத்தொற்று நோயின் போது ஒரு வாக்கெடுப்பை நடத்துவது விவேகமானதா? என்ற கேள்விகளும் ஊகங்களும் எழுந்துள்ளன.

கொரோனா வைரஸ் பிரான்சின் "ஒரு நூற்றாண்டில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடி" என்று கூறிய மைக்ரோன் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தேர்லுக்காக அமைக்கப்படும் வாக்குச் சாவடியில் வாக்காளருக்கா கிருமித் தடுப்பு மருந்து (ஜெல்) மற்றும் கையுறைகள், வைக்கப்படும் எனக் விளக்கிய மைக்ரோன், வாக்காளர் வரிசையில் நிற்பதற்கு உலோகங்களான தடுப்பு வேலியும் மஞ்சள் கறுப்பு நிறத்திலான கோடுகள் தரையில் காணப்படும் என்கிறார்.

அக்கோடுகள் வாக்காளர்கள் வரிசையில் எங்கு நிற்க வேண்டும் என்பதை தெரிவிக்கும். இது வாக்காளர் நெருக்கமாக இருப்பதை முழுமையாகக் கட்டுப்படுத்தும் என மைக்ரோன் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments