கோத்தா முன்னிலையில் பதவியேற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர்

மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் ஆகியோர் இன்று (03) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

ஜானாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

நீதியரசர் யசந்த கோட்டேகொட உச்ச நீதிமன்றத்தின் நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

மேலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் எச்.எம்.டி.நவாஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்

No comments